‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது

யோகி பாபு, முன்னணி பாலிவுட் நடிகர், பிரபல தமிழ் நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

‘மோ’, ‘மாயோன்’, ‘மெட்ராஸ் மேட்னி’, செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றை தொடர்ந்து மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஐந்தாவது படைப்பாக ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படத்டதில் சுந்தர் சி நாயகனாக நடிக்க துரை V.Z. இயக்குகிறார்.

‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் இப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையிலான திகில் நிறைந்த பேய் கதையாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.

திரைப்படம் குறித்து மேலும் பேசிய அவர், “சுந்தர் சி, துரை V.Z. கூட்டணியில் மீண்டும் உருவாகும் திரைப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி. படப்பிடிப்பை வரும் மே மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு இது ஒரு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்,” என்றார்.

யோகி பாபு, முன்னணி பாலிவுட் நடிகர் மற்றும் பிரபல தமிழ் நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். மிகச் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைகின்றனர். ‘பகவந்த் கேசரி’, ‘அகண்டா’, ‘அகண்டா 2’ உள்ளிட்ட பிளாக்பஸ்டர் தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சி. ராம்பிரசாத் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, முன்னணி கலை இயக்குநர் டி.ஆர்.கே கிரண் கலை இயக்கத்தை கையாளுகிறார்.

மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிப்பில் துரை V.Z. இயக்கத்தில் சுந்தர் சி நடிக்கும் புதிய திரைப்படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.

This will close in 0 seconds

This will close in 0 seconds

This will close in 0 seconds

This will close in 0 seconds