தமிழ் திரைப்பட உலகில் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், தனது இரண்டாவது தயாரிப்பை மிகுந்த உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. இப்படத்தை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் (Sushma Cine Arts) இணைந்து வழங்குகிறது இந்த புதிய திரைப்படத்தில் இளம் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இது அவர் நாயகனாக நடிக்கும் 11வது திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. காதல், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள கவின், இந்த முறை முழுக்க குடும்பத்தை மையமாகக் கொண்ட கதையில் நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படம் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சமகால வாழ்க்கை முறையையும், உறவுகளின் நுணுக்கங்களையும் பேசும் இப்படம், எல்லா தரப்பினரையும் கவரும் வகையில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகவுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இத்திரைப்படத்தை, தேசிய விருது பெற்ற பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களின் முதன்மை அசோசியேட்டாக பணியாற்றிய பிரவீன் பரமசிவன் இயக்குகிறார்.

மேலும், திறமையான நடிகர்கள் மற்றும் அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த திரைப்படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக பியாண்ட் பிக்சர்ஸ் மற்றும் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் (Sushma Cine Arts ) இணைந்து வழங்கும் இப்படத்தை ஜெய்வர்தா தயாரிக்கிறார். மற்றும் ரெடாக்டட் ஸ்டுடியோஸ் (Redacted Studios) சஞ்சன் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.

மொத்தத்தில், பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களின் அடுத்த படைப்பை சிறப்பாக வடிவமைத்து கொண்டு வருவது தெளிவாக தெரிகிறது. கவின் நடிப்பில் உருவாகும் இந்த குடும்பக் கதையம்சம் கொண்ட திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You missed

This will close in 0 seconds

This will close in 0 seconds

This will close in 0 seconds

This will close in 0 seconds