ஜே பி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிப்பில் முனீஸ்காந்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் ‘ புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ‘மகாராஜா’ படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்.

அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்னா, கல்கி, ஜென்சன் திவாகர், வினோத் முன்னா, அனன்யா ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் காசிநாத் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை என். பி. ஸ்ரீகாந்த் கவனிக்க கலை இயக்கத்தை வி. சண்முகராஜா மேற்கொள்கிறார். சண்டை பயிற்சியை ராம் குமாரும், ஆடை வடிவமைப்பு பணிகளை ஸ்ரீ நிஷா பாலாஜியும், நடன அமைப்பை சந்ததோசும் கையாள்கிறார்கள். ஃபேண்டஸி காமெடி திரைப்படமாக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை ஜே பி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”பழைமையான கேமரா ஒன்றை மையமாக வைத்து ஃபேண்டஸி காமெடி ஜானரில் இப்படம் தயாராகிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமாக ஒரு அரங்கம் அமைத்து, அதில் படப்பிடிப்பு நடத்துகிறோம் ” என்றார்.

This will close in 0 seconds

This will close in 0 seconds

This will close in 0 seconds

This will close in 0 seconds