தமிழ் சினிமா ‘ஓஹோ’ன்னு இருந்த காலம் உண்டு:மறுப்பதற்கில்லை! ஆனால், இப்பவும் அப்படியா என்றால் ICU வார்டில் காட்டப்படும் மானிட்டரில், ஏறி இறங்கும் பல்ஸ் போல் இருப்பதை: நல்ல சினிமாவை நேசிக்கும் எவராலும் மறுக்க முடியாது?!
முதல் பாராவைப் படிச்சிட்டு லேட்டஸ்ட் படம் பத்தி ஏதோ சொல்லப் போகிறேன் என்று நினைக்க வேண்டாம். பிரைமில் தற்செயலாக தேடும் போது கிடைத்த படம்.2019 ல வந்திருக்கு.
அறுபத்தைந்து காலக்கட்டத்தில் காதல் கதையாக தொடங்கும் படம் டைட்டில் கார்டுக்கு அப்புறம் எண்பதுகளில் தொடர்கிறது.
திருவிழாவில் தொடங்கி பிறிதொரு திருவிழாவில் முடிகிறது படம். ஹீரோயின் கதாபாத்திரம் அட்டகாசத்தின் உச்சம்! அதைவிட சிறப்பு…ப்ரீ கிளைமாக்ஸில் வரும் ‘ஐய் ஆம் ஏ டிஸ்கோ டான்சர்’ என வாசிக்கும் பேண்ட் வாத்திய பாடல். கிளைமாக்ஸ்… நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க!
நான் தமிழ் வெர்சன் தான் பார்த்தேன். டப்பிங் இஞ்சார்ச் யாராக இருந்தாலும்; வாழ்த்துகள் மக்கா!
கல்ச்சர்-காதல்-காத்திரம் மூன்றையும் செம காக்டெயில்லாக கொடுத்திருக்கிறார்கள் சேட்டன் மார்…தென் மேற்கு திசை நோக்கி ஒரு லவ் யூ…
