தமிழ் சினிமாவில் காலகாலமாக ‘தாலி’ சென்டிமென்ட்டோடு வந்த படங்களின் வரிசையில் வந்திருக்கும் இன்னொரு படம்தான் DUDE.

படம் தொடங்கிய ஆரம்ப காட்சியிலிருந்து அதகளம் ஆரம்பிக்கிறது… இந்த இடத்தில் ஒரு பொறுப்பு/துறப்பு போட வேண்டியது இருக்கு: இந்த விமர்சனத்தைப் படித்து கொண்டிருப்பவர்கள் 90’s கிட் என்றால்
ஸ்கிப் பண்ணிட்டு அடுத்த செய்திக்கு போவது தேவை இல்லாத பஞ்சாயத்தைக் குறைக்கும். திஸ் இஸ் ஒன்லி ஃபார் 2K கிட்ஸ்.

காதல், நட்பு இரண்டையும் 2K எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களுக்குப் பிடித்த ஃபோர்மெட்டில் சொல்லியிருப்பதுதான் புதுசு.

தவிர, காதல் காமெடி என்று போகும் திரைக்கதையில் கொடுத்த டிவிஸ்ட் யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸ். ஆணவப் படுகொலை குறித்து வரும் படங்களில் திரை முழுக்க இரத்தம் தெறிக்கும்! சில நேரங்களில் பார்வையாளனின் முகத்திலும் விழும். அறிமுக இயக்குனர் கீர்த்திவாசன் ஜாலியாக கதையை ஆரம்பித்து துளி இரத்தம் இல்லாமல் தரமான சம்பவம் பண்ணியிருக்கார்.

பிரதீப் ரங்கநாதன் தன் உடல்வாகுக்கு என்ன செட்டாகும் என்ற மீட்டரை சரியாகப் பிடித்து இந்த முறையும் ஜெயித்திருக்கிறார்.

படத்தில் சரத்குமாரின் கேரக்டர் வடிமைப்பு இதுவரை இல்லாத அளவுக்கு செம மாஸ்!

ஃபர்ஸ்ட் ஹாஃப் டாப் கியரில் போகிறது… செகண்ட் ஹாஃப்ல ஆங்காங்கே ஸ்பீட் பிரேக் ஏறி இறங்குகிறது. ஆனாலும், முதல் படத்திற்கு எடுத்துக்கொண்ட கதைக க்காகவே டைரக்டரை பாராட்டலாம்.