எப்பவுமே, தீபாவளி: பொங்கல் என்றால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்…எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் தொடங்கி, ரஜினி-கமல் அதுக்கு அப்புறம் அஜித்-விஜய் என நீண்ட இந்த திருவிழாக்களில் முன்னணி நடிகர்கள் எவரும் இல்லாமல் ஒரு கொண்டாடப் போகும் முதல் தீபாவளி என்று நினைக்கிறேன். டேட்டாவில் தவறு இருந்தால் ஸாரி!

ஹரிஷ் கல்யாண் நடித்த DIESEL,துருவ் விக்ரம் நடித்த BISON அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் DUDE. மூன்றும் ரிலீஸ் ஆகிறது. முதல் படமாக DIESEL பார்க்க நேர்ந்தது.

ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி தொடங்கி ஏகப்பட்ட ஆர்ட்டிஸ் இருக்கிறார்கள்.’அடங்காதே’ படத்தை இயக்கிய சண்முகம் முத்துசாமி தான் இயக்குனர். நிஜத்தில் சமூகத்திற்கு எதிராக நடக்கும் அநீதிக்கு எதிராக கடுமையாக குரல் கொடுக்கக் கூடிய போராளி.

இந்தப் படத்தின் கதையும் அப்படிதான். பூர்வ குடிகளான இவர்களுக்கு எதிராக நடக்கும் கார்ப்பரேட்களின் அட்டகாசத்தை சொல்லியிருக்கிறார். படம் தொடங்கி முதல் இருபது அட்டகாசம். அடுத்து வருகிற காதல் கதைக்கு செம ஸ்பீட் ப்ரேக். அந்த ஏரியா தொடங்கி இன்டர்வெல் வரைக்கும் மேக்கிங்கும் சுமார்தான்.

செகண்ட் ஹாஃப் ல அந்தப் பிரச்சினை இல்லை. இயக்குனர் ஃபர்ஸ்ட் ஹாஃப் ல லீடும் செகண்ட் ஹாஃப் ல அவர் சொல்ல நினைத்த முழு கதையையும் வைத்திருக்கிறார்.பரபரவென்று போகிறது.கதாபாத்திரங்களுக்கு அவர் வைத்திருக்கும் பேர், குறியீடாக சில காட்சிகள் என்று கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களையும், தற்போது நடந்து கொண்டிருக்கும் அநீதிகளையும் அப்பட்டமாக சொல்லியிருக்கிறார்.

போராட்டம் நடத்தும் பொதுமக்களைக் கலைக்க எடுக்கும் முயற்சியில் தூத்துக்குடி சம்பவம் ஒன்றை அப்படியே கண் முன் நிறுத்தியது தரமான சம்பவம்!

ஆக்சன் ஹீரோவாக மாற இந்தக் கதையில் ஸ்கோப் இருக்கு என்று நம்பித்தான் ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தை ஒப்புக்கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

VIP,VVIP-களுக்கெல்லாம் பொதுவா இந்தியா முழுக்க டோல்கேட்களில் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை… அந்த வண்டிகள் நிற்காமல் போய்க்கிட்டே இருக்கலாம். அந்த மாதிரி ஹரிஸ்க்கு ஆக்சன் ரூட்டுக்கு பாஸ் கிடைச்சிருக்கு. போலாம் ரைட்…