மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இயக்குனர் மற்றும் கவிஞர் சீனு ராமசாமி எழுதி வேரல் புக்ஸ் பதிப்பகம் பதிப்பித்த ‘தயை’ என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. புனே நகரத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் புனே பாரதி வித்யாபீட் பல்கலை கழகத்தின் பதிவாளர் ஜெயக்குமார் புத்தகத்தை வெளியிட புனே நகரத் தமிழ்ச் சங்க செயலாளர் முனைவர் சத்தியநாராயணன் பெற்றுக் கொண்டார். விழாவில் கவிஞர் #சீனுராமசாமி, புனே நகரத் தமிழ் சங்க உறுப்பினர்கள் ரங்கராஜன், ரவிசங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை புனே நகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் அருள் செல்வன் துணைத் தலைவர் பாஸ்கர் மற்றும் பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

#Seenuramasamy @seenuramasamy

@onlynikil

You missed

This will close in 0 seconds

This will close in 0 seconds