தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களோ பெண் தயாரிப்பாளர்களோ அதிகம் இல்லை என்று குறை சொல்லும் நாம்
.
ஜெய தேவி என்ற ஒரு legendary Director / Producer ரை கவனிக்க மறந்து விட்டோம் என்று சொல்வதை விட கொண்டாட மறந்து விட்டோம் என்றே சொல்லலாம்
.
இவரை எங்கேயோ பார்த்த ஞாபகம் உங்களுக்கு இருக்கும் சிவாஜி த பாஸ் படத்தில் செகண்ட் ஹாபில் ஹீரோயினை ஒரு போலீஸ் வந்து கூட்டிக் கொண்டு சென்று ரஜினியை பற்றி வாக்குமூலம் வாங்குவார் அந்த rugged போலீஸ் தான் இந்த ஜெயதேவி..
.
legendary cinematographer PC Sreeram அவர்களுக்கு முதல் பட வாய்ப்பு இவர்தான் கொடுத்திருக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா
.
அது மட்டுமல்ல போஸ்டர் ஓட்டுபவராக தன் வாழ்க்கையை தொடங்கிய தயாரிப்பாளர் கலை புலி தானு அவர்களுக்கு தயாரிப்பாளராகவும் வாய்ப்பை கொடுத்தவரே இவர்தான்
.
எம்ஜிஆரை பார்த்து சினிமாவுக்கு நடன கலைஞராக வந்த ஜெய தேவி குடும்ப கஷ்டத்திற்காக நாடக நடிகராக மாறுகிறார் இந்த நாடகத்தைப் பார்த்த ஒரு டான்ஸ் மாஸ்டர் மூலம் இதயவீணை படத்தில் காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர் பாடலுக்காக எம்ஜிஆருக்கு அருகில் குரூப் டான்ஸராக நிற்க வாய்ப்பு கிடைக்கிறது..
.
அதுவே தனது வாழ்க்கையில் மிகப் பெரிய வாய்ப்பாக நினைத்து
.
அடுத்தடுத்து 40 படங்கள் தமிழ் சினிமாவில் நடிகராக நடிக்கிறார்
.
ஏன் ரஜினிக்கு கூட ஜோடியாக நடித்திருக்கிறார்
.
அதற்குப் பிறகு தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை இவருக்கு வருகிறது.. தமிழ் சினிமாவில் முதல் பெண் தயாரிப்பாளர் இயக்குனர் T.P Rajalakshmi கு பிறகு ஒரு பெண் நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என்ற மூன்று விஷயத்தையும் பார்த்தவர் என்றால் அது இவரைத்தான் சொல்ல முடியும்
.
தன்னுடன் நாடகத்தில் பணியாற்றிய இயக்குனர் மௌலி அவர்களுக்கு முதல் பட வாய்ப்பு இவர்தான் கொடுத்திருக்கிறார்.. மற்றவை நேரில் என்ற அந்த படம் இவரின் முதல் தயாரிப்பு படம்
.
அந்தப் படம் தொடங்கி அடுத்தடுத்த படங்கள் 100 நாளை கடந்து ஓடுகிறது ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக மாறுகிறார்
.
அப்படி இவர் தயாரித்த ஒரு படமான வா இந்த பக்கம் என்ற படத்தில் ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம்.. 2000 ரூபாய் சம்பளத்திற்கு Book செய்யப்படுகிறார் பி.சி ஸ்ரீ ராமிற்கு இது முதல் படம்
.

இப்படி இவர் தயாரித்த ஒரு படத்தை.. டிஸ்ட்ரிபியூட் செய்ய வேண்டும் என்று கலைப்புலி தானு கேட்டு வருகிறார்… ஆனால் இவர் சொல்லும் பணம் தானுவிடம் இல்லை.. எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தால்.. போஸ்டர் ஒட்டுபவனாக வாழ்க்கையை தொடங்கிய எனக்கு.. வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவியாக இருக்கும் என்று சொல்ல… இவரும் சம்மதித்து அவரிடம் இருந்த பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு பட பெட்டியை கொடுக்க.. அந்தப் படம் நல்ல ஹிட் ஆக Thanu sir கும் தயாரிப்பாளராக மாற அது முதல் படியாக அமைகிறது
.
அதே மௌலியை வைத்து இவர் தயாரிக்கும் ஒரு படத்தின் பூஜை விழாவிற்கு இயக்குனர் மௌலி சிறப்பு விருந்தினராக Director பாலச்சந்தர் அவர்களை கூப்பிட வேண்டும் என்று சொல்ல அதன் உள் அர்த்தம் புரியாமல் இவரும் ஓகே என்று சொல்ல
.
அதே படத்தின் பூஜையில் கே பாலச்சந்தர்.. கவிதாலயா தயாரிக்கும் அடுத்த படத்தில் இயக்குனர் மௌலிதான் என்று அறிவிக்கிறார்
.
தொடர்ந்து மௌலியை வைத்து படங்கள் தயாரித்து ஹிட் கொடுத்த இவர் மௌலி தன்னை விட்டுப் போகிறார் என்று தெரிந்ததும் சற்று தடுமாறுகிறார்
.
அன்று முடிவெடுக்கிறார் நாமும் இயக்குனராக மாற வேண்டும் என்று
முடிவெடுத்து ” நலம் நலம் அறிய ஆவல் ” என்ற படத்தை இயக்க அது வெற்றி படமாக மாறுகிறது
.
வெறும் ஐந்து நாளில் ஒரு படத்தை இயக்கியவர் என்ற பெருமை தமிழ் சினிமாவில் இவருக்கே சேரும்
.
அடுத்தடுத்து பல படங்களை இயக்குகிறார்…இப்படி தொழில் ரீதியாக வெற்றி அடையும் பல பெண்களுக்கு பிரச்சனையே அவர்களுக்கு துணைவராக வரும் ஆண்கள் மூலமாகத்தான் இருக்கும்.. தன் காதலர் மூலம் தன் வாழ்க்கையில் சரிவை சந்திக்கிறார்
.
தான் தயாரித்து இயக்கிய படங்களுக்கு cinematographer ஆக வேலை பார்த்த வேலு பிர@பகரன் மீது காதல் ஏற்பட இரண்டு பேரும் living together ல் முதலில் வாழ்கின்றனர்.
.
வேலு பிர@பகரன் தன்னை உபயோகித்துக் கொண்டார் என்று இவருக்கு தெரிய வருகிறது
.
நாளைய மனிதன் , சரியான ஜோடி, அதிசய மனிதன் போன்ற படங்கள் வரை இவர் இயக்க வேலு பிரப@கரன் அவர் இயக்குனராக பேரை போட்டுக் கொள்கிறார்… அவர் மேல் இருந்த காதலில் இவரும் ஓகே சொல்கிறார்
.
பிறகு வேலு பிரப@கரன் ஏமாற்றுவது தெரிய வர அந்த வாழ்க்கையில் இருந்தும் விலகுகிறார்
.
சிறுவயதில் அம்மா அப்பாவை இழந்து தனிமையில் தன் வாழ்க்கையை தொடங்கிய ஜெயதேவிக்கு ஏனோ இறுதிவரை தனிமையே வாழ்க்கையாக முடிந்தது 2023 ஆண்டு இயற்கை எய்தினார்
.
இப்படி ஒரு நடிகையாக இயக்குனராக தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பல சாதனைகளை செய்த ஜெயதேவி.. அவர்களை நாம் கொண்டாட மறந்து இருக்கிறோம் 😪
எனக்கு திரைக்கதை எழுதவும் சினிமாவை எந்தவிதத்தில் எடுக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்த குரு என்று சொல்வதை விட என் அம்மா என்று சொல்லலாம் அதிகமாக english movie’s நான் பார்த்ததும் அம்மா கூடாதான் அதுவும் அவர்கள் விரும்பி பார்ப்பது Thriller movies fantasy அதனால் என்னமோ எனக்கும் அந்த மாதிரி படங்கள் எடுக்க வேண்டும் என்று தோன்றியது, என்னால் ஒரு இயக்குனர் ஆகா முடியும் என்னிடம் திறமை உள்ளது என்று முதலில் சொன்னவர்கள் அம்மா ஜெயதேவி அவர்கள் தான்
