சென்னையில் நீளிரா படம் பார்த்தேன். இந்திய அமைதிப் படை என்ற பெயரில் இந்தியக் கொலைப் படையின் பிடியில் ஓரிரவு சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் பதைபதைப்பைச் செதுக்கித் தந்துள்ள அருமையான கலைப் படைப்பு.

“It is not Indian Peace Keeping Force, it is Indian Peace Killing Force” என்றார் வி. ஆர். கிருஷ்ணய்யர். அந்தக் கூற்றுக்கு நெருக்கமான உண்மையை முடிந்தளவுக்குத் திரை வடிவத்தில் கொடுத்துள்ளார் இயக்குனர் சோமீதரன். “முடிந்தளவுக்கு” என்று நான் சொல்வதற்குக் காரணம் இங்குள்ள திரைத் தணிக்கைத் துறையின் தடையைத் தாண்டி இத்தகைய படங்கள் வெளிவருவதில் உள்ள இடர்ப்பாடுகளே.

ஈழத் தமிழர்களின் துயரைச் சொல்லும் படங்கள் ஓரளவுக்கு வந்திருப்பினும், இந்தப் படம் கலை நேர்த்தியுடன் எங்கும் பிசகாமல் இறுக்கமான காட்சி அமைப்புடன விறுவிறுப்பாகச் செல்வது தனிச் சிறப்பு.

“ஆர்மி என்றால் ஆர்மிதான், எங்களுக்கும் நீங்களும் இலங்கைப் படையும் ஒன்றுதான்” என்று முதியவர் இறுதிக் காட்சியில் கூறுவதே படத்தின் அடிநாதமாய் ஒலிக்கிறது.

ஈழத் தமிழர் மேல் அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழரும் பார்க்க வேண்டிய படம் நீளிரா!
@நலங்கிள்ளி

This will close in 0 seconds

This will close in 0 seconds

This will close in 0 seconds

This will close in 0 seconds