சினிமாவில் ஒரு படம் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் நடக்கும் போதே… அது என்ன மாதிரியான படம் என்கிற மவுத் டாக் சினிமா இன்டஸ்ட்ரிக்கு தெரிந்துவிடும்.

‘ஒரு நதி தன் வழித்தடத்தை தானே கண்டடையும்’ என்பதைப் போல!

எல்லாக் காலங்களிலும் வழித்தடத்தை கண்டதைந்ததா… என்றால்: இல்லை என்கிற உதாரணமும் இருக்கு

‘MADE IN KOREA ‘ படம் குறித்தும் எனக்கு முரண்பாடு இருந்தது. காரணம், பிரியங்கா மோகன், அண்ணன்/ இயக்குனர் முரளி அப்பாஸ் தம்பி திருநாவுக்கரசு தொடங்கி மூன்று நான்கு பேர் மட்டுமே தெரிந்த முகங்கள். மற்றவர்கள் அத்தனை பேரும் கொரியன் ஆட்கள். எவ்வளவோ KOREAN MOVIES பார்த்திருந்தாலும் , போஸ்டரில் பார்த்த முகங்கள் பழக்கம் இல்லாத முகங்களாக இருந்தது.

மவுத் டாக் மட்டுமே நம்பி போனேன். ஊட்டியில் ஏதோ ஒரு மலை கிராமத்தில் வாழும் ஒரு சின்னப் பொண்ணுக்கு கொரியா போக வேண்டும் என்பது வாழ்நாள் ஆசை!

செல்போன் சிக்னல்கள் கிடைக்காமல் யானையின் முதுகில் ஏறி நிற்க வேண்டிய சூழலில் உள்ள பெண், தனி மனுஷியாக புறப்பட்டு கொரியாவுக்கு போய் எப்படி ஜெயிக்கிறார் என்பதுதான் கதை.

கதை சொன்னால் சுவாரஸ்யம் குறைந்து விடும்.20% ஊட்டி:80% கொரியா… என்பதாக நகரும் சினிமாவில் எமோஷனல், கொஞ்சம் திரில்லர் என கொண்டாட்டமாக இருக்கிறது படம்.கொரியாவையும் அங்குள்ள பேரன்பு மனிதர்களையும் மொத்தப் படத்திலும் கடத்தியிருக்கிறார் இயக்குனர் Ra.karthik.

இளகிய மனம் படைத்த ஆட்களோடு ஒரு கொரியா ட்ரிப் போனது போல் இருக்கிறது மொத்தப் படமும்! அதிலும் மாளவிகா மோகனன் கூட வரும் கொரிய கிழவி, சிவகார்த்திகேயன் தாய்க்கிழவி போல் உனக்கான வாழ்க்கையை வாழ்ந்து விடு என்கிற காட்சி/பெண் விடுதலையின் உச்சம்!

அவசியம் பார்க்க வேண்டிய படம் -MADE IN KOREA

This will close in 0 seconds

This will close in 0 seconds

This will close in 0 seconds

This will close in 0 seconds