சோலியை முடிப்பவன்’ ‘தரகன்’ என்றெல்லாம் பெயர் வைக்காமல் கொஞ்சம் மாறுபட்ட தலைப்பு. படத்தில் வரும் சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு கூட ‘காவேரிக் கறை’. பனியனில் ‘Everything you can imagine is real’ வாசகம். அர்ஜூன் பெயர் ‘மகுடபதி’. கல்கியின் நாவல். சாதாரணக் காவல் நிலையக் கணவன்-மனைவி’ புகார் காட்சியில் கூடப் பொங்கும் உணர்வுப் பூர்வம். லிப்ட்டுக்குள் சண்டை. வழக்கமான டெம்ப்ளேட்களிலிருந்து விலகிப் பயணிக்கும் பரபரப்பான ஹாட் ஆம்லேட். ஆரோக்கியமான அணுகுமுறைகள்.
கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பார் போல அர்ஜூன். போலீஸ் அதிகாரியாகப் பாலிஷ் பெர்பர்மன்ஸ். துவக்கக் கொடூரக் கொலையிலிருந்து அடர்த்தியான மர்ம முடிச்சுகளுடன் விறுவிறுவென்று நகரும் திரைக்கதை. காட்டப்படும் அபார்ட்மெண்ட் கூடஅபூ மாறுபட்ட கட்டிட அமைப்பில்தான் உள்ளது. இந்தக் கதையில் கூட இயல்பான காமெடி ஆச்சரியம். இடைவேளை ட்விஸ்ட் அது ட்விஸ்ட் அல்ல ட்விஸ்டர்.
அங்கே இங்கே என்று சில பல கோடுகள். முடிவில் அவை ஒன்றிணைக்கப்படும் விதம் காண ஆவலாக உள்ளது. ஒரு காட்சியில் 2023 காலண்டர் வருகிறது. படம் அப்போதிருந்தே தயாரிப்பில் இருந்திருக்கிறது போல. தமுஎகச போல இலக்கிய அமைப்பும் எழுத்தாளர், பதிப்பகத்தார் என்று விரியும் பின்னணியும் அபூர்வ வகைத் திரை மெட்டீரியல்கள், எப்போதாவதுதான் படமாகும்.
இயக்குனர் தினேஷ் லக்ஷ்மனுக்கு இது முதல் படம் போல. அப்படித் தெரியவில்லை. தேர்ந்த இயக்கம். திரில்லர்களுக்கே உரித்தான ஒளிப்பதிவு, பின்னணி இசை. எல்லா வகையிலும் மாறுபட்ட இம்மாதிரி நேர்மறைச் சிந்தனையுடன் தெளிவான படங்கள் வந்தால் ரசிகர்களின் குலைகள் நடுங்க வாய்ப்பில்லை.
@தூயவன்.
