சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் திரு செந்தில் தியாகராஜன் அவர்கள் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சீனியர் Vice President ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் இந்திய ரக்பி சங்கத்தின்

பொதுச் செயலராக பணியாற்றி வருகிறார் மற்றும் இந்தியாவில் ரக்பி மற்றும் கபடி விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு முக்கிய வழிகாட்டியாக இருக்கிறார்.

ரக்பி பிரீமியர் லீக்கை தொடங்குவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார், அதன் முதல் சீசனில் சென்னை புல்ஸ் அணி கலந்து கொண்டது. அந்த அணியில் மூன்று ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற வீரர்கள் இருந்தனர்.

மேலும், சுஹைல் சந்தோக் உடன் இணைந்து தமிழ்நாடு கபடி லீக்கை துவக்குவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். சர்வதேச அளவில் ரக்பி செவன்ஸ் லீக்கை மேம்படுத்துவதிலும், இந்த விளையாட்டுகளின் தரத்தை உலகளவில் உயர்த்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றி வருகிறார்