லாக்டவுனுக்கு அப்புறம் நான் தியேட்டரில் போய் படம் பார்ப்பது என்பது குறைந்து விட்டது.எப்போதாவது சில படங்களின் ட்ரெயிலர் பார்திட்டுப் போவேன். நம்பிக்கை கொடுத்த படங்களும் உண்டு: நாசமாப் போரவனே இதுக்காகவா வந்தே என்று எகத்தாளம் பண்ணிய படங்களும் உண்டு!
பொதுவாகவே என்னோட வேலை மொபைல் போனில் பேசுகிற மாதிரியான வேலை என்பதால் OTT யில் படம் பார்ப்பேன். போன் வந்தால் பாஸ் பட்டனை அழுத்திவிட்டு, போன் கால் அட்டர்ன் பண்ணிட்டு மறுபடியும் பாஸ் பட்டனை ரிலீஸ் பண்ணுவேன்.
பெரும்பாலும் படங்கள் என்றாலும், வெப் சீரிஸ் என்றாலும் அட் ஏ ஸ்ட்ரேச் பார்த்து முடிப்பது என் வழக்கம். சமீபத்திய zee 5 ரிலீஸ் அப்படியில்லை என்பதும் அதன் மீதான கோபமும் அதிகம் என்பதை முந்தைய ஸ்டேட்டசில் சொல்லியிருப்பேன்.
Search: The Naina Murder Case
இந்தி வெப் சீரிஸ் லேட்டஸ்ட் வரவு. நவி மும்பையில் ஒரு கல்லூரி மாணவியின் மர்டரில் தொடங்குகிறது கதை. மிகப் பெரிய கல்வித்தந்தையாக இருக்கும் ஒருவர், அடுத்து வரும் எலக்சனில் பெரிய அளவில் அதிகாரத்தைக் கைப்பற்ற திட்டம் போட்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் இந்தக் கொலை நடக்கிறது.
நவீன டெக்னாலஜி தொடங்கி ஃபேமிலி பிரச்சனை வரை எல்லாமே இருக்கு. ஒரு ஆள் சந்தேக வளையத்துக்குள் வந்தால்; எதனால் என்கிற தியரி… நகர்ந்து நகர்ந்து கடையில் ஒரு ‘டச்’ சோடு கதையை முடிக்கிறார்கள்!
மேக்கிங், ஸ்கிரீன் பிளே ரெண்டுமே அட்டகாசம். செம க்ரிப்பாகப் போகிறது சீரிஸ்.
JIO HOTSTAR இருக்கிறது. தமிழ் வேர்சனும் உண்டு. டோண்ட் மிஸ் இட்.
